• Dinakaran.com |20 May 2013
    Visit Dinakaran.com


    • அதிமுக பாசறை கூட்டம் ஜெயலலிதா அறிக்கை

      சென்னை : அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனை கூட்டங் களை இம்மாதம் 25 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடத்த வேண்டும். அரசின் சாதனைகளை விளக்குவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். வரும் 25ம் தேதி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் மாலை 4 மணிக்கு முதல் கூட்டம் நடைபெறும். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் வடக்கு மற்றும் தெற்கு, வேலூர் மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு, வடசென்னை தெற்கு மற்றும் வடக்கு, தென்சென்னை ...



    • ராமதாசுக்கு இன்று இதயஅறுவை சிகிச்சை

      சென்னை : திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாமக ராமதாஸ் 12 நாள் சிறை வாசத்துக்கு பின் கடந்த 11ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அன்று மாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு இன்று இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என பாமக தலைமை அலுவலகம் ...



    • பொதுக்கூட்டங்களில் அநாகரிகமாக பேசாதீர்கள் பேச்சாளர்களுக்கு கருணாநிதி அறிவுரை

      சென்னை : பொதுக்கூட்டங்களில்  மேடை நாகரிகம் இன்றி அதிமுகவைப்போல் பேசாதீர்கள், என்று திமுக தலைவர் கருணாநிதி பேச்சாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தினுள் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது.  கூட்டத்துக்கு பின் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:  பேச்சாளர்களுக்கு என்ன ஆலோசனை கூறினீர்கள்? நன்றாகப் பேசுங்கள், பேசுவதை தெளிவாகப் பேசுங்கள், திமுகவின்  கருத்துகள் மக்களுக்கு சென்று சேரும் வகையிலும், அவர்களின் இதயங்களில் பதியும் வகையில் ...



    • வரும் 30ம் தேதிக்குள் தனி தெலங்கானா அமைக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கெடு

      ஐதராபாத்: வரும் 30ம் தேதிக்குள் தெலங்கானா தனி மாநிலம் அமைக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் இறுதி கெடு விதித்துள்ளனர். இல்லாவிட்டால் கட்சியில் இருந்து விலகுவோம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி.சி. சாக்கோ அண்மையில் அளித்த பேட்டியில் ''தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் செயல்திட்டத்தில் இடம்பெறவில்லை'' என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து தெலங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க் கள் மற்றும் தலைவர் நேற்று ஐதராபாத்தில் அவசர ஆலோசனை நடத்தினர். கூட்டத்துக்கு ...



    • தே.ஜ கூட்டணியில் மோதல் பா.ஜ எம்.பியை அவமதித்தார் நிதிஷ்

      பாட்னா : பீகாரில் நடந்த அரசு கூட்டம் ஒன்றில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார், பா.ஜ எம்.பி கீர்த்தி ஆசாத் இடையே மோதல் ஏற்பட்டது. வடக்கு பீகாரில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தர்பங்கா நகரில் நிதிஷ் குமார் நேற்றுமுன்தினம் ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில், தொகுதி எம்.பி என்ற முறையில் பா.ஜவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் கலந்து கொண்டார். மேலும், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிகாரிகளுக்கு சில ...



    • 2 ஆண்டு ஆட்சியில் மம்தா சாதனை ஜீரோ : பிரதீப் பட்டாச்சார்யா

      கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தாவின் 2 ஆண்டு ஆட்சியில் சாதனைகள் எதுவும் இல்லை என காங்கிரஸ் தாக்கி உள்ளது.மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து நாளை 3ம் ஆண்டு பிறக்கிறது. அவரது 2 ஆண்டு ஆட்சியில் சாதனைகள் ஜீரோ என காங்கிரஸ் கூறியுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா, நிருபர்களிடம் கூறியதாவது: 2 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை இப்படி மாற்றுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் என்ன மாற்றம் என்பது தான் கேள்வி. மம்தா தலைமையில் மேற்கு வங்கம் அழிவை நோக்கி செல்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ...



    • பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வருமான வரம்பு ரூ6 லட்சமாக உயர்வு

      சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, திமுக இடம் பெற்றிருந்த தேசிய முன்னணி அரசின் பிரதமர் சமூகநீதி காவலர் வி.பி.சிங் காலத்திலிருந்தே, மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி வருகிறது. இவர்களில் முன்னேறியவர்களை (கிரீமிலேயர்) தவிர்ப்பதற்காக, ஆண்டு ஒன்றுக்கு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த உச்சவரம்பை நகர்ப்புறங்களில் ரூ.12 லட்சமாகவும், கிராமப்புறங்களில் ரூ.9 லட்சமாகவும் உயர்த்த ...



    • நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

      பட்டுக்கோட்டை: இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தான் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.பட்டுக்கோட்டையில் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஈழத்தமிழர்கள் ஒரு போதும் அழியமாட்டார்கள்‘ என்ற நூலையும், முனைவர் தவசு எழுதிய ‘லட்சிய போராளி எல்.ஜி’ என்ற நு£லையும் வெளியிட்டார். தி.க. தலைவர் கி.வீரமணி நூலை பெற்றுக் கொண்டார். விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: எல்.கணேசன் படிக்கும்போது ...



    • மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது மதிமுக : வைகோ பெருமிதம்

      விருதுநகர்: விருதுநகர் அனுமன் மண்டபத்தில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: மதிமுக ஏராளமான தோல்விகளை கடந்து இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. விவசாயிகள், அணுஉலைக்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி 1400 கி.மீ. நடை பயணம் என மக்கள் பிரச்னைகளை மதிமுக முன்னெடுத்து போராடி வருவதால் மக்கள் மத்தியில் கட்சியின் மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மதிமுக வளர்ந்துள்ளது. செப்டம்பர் 15ம் தேதி விருதுநகரில் அண்ணா ...



    • கடலூரில் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்துக்கு தடை

      கடலூர்: நாம் தமிழர் கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிறது. இதையொ ட்டி, கடலூரில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் இன எழுச்சி கருத்தரங்கம், பேரணி, பொதுக் கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு நிபந்தனையின் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எனவே, மாநாட்டு ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்தனர். கடலூர் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன. மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படங்கள் இடம் பெற்றிருந்ததால் நாம் தமிழர் கட்சியின் பேனர்களை ...



    {literal} {/literal}